கலைச்சொற்கள்

பரிந்துரைக்கப்பட்ட கலைச்சொற்களின் பட்டியலைக் கீழ்காணலாம். இப்பட்டியலின் நோக்கம் wiktionary போன்ற அகரமுதலிகளுக்கு மாற்றாகயிருப்பதன்று. நம் தமிழாக்கம் ஓரியல்புடையதாயிருப்பதற்குதவும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பட்டியலே இது. இப்பட்டியலில் குறை ஏதேனுமிருந்தால் அதனைப் பற்றி நம் அஞ்சற்பட்டியில் குறிப்பிடுக; கலந்துரையாடலாம்.

account
கணக்கு
admin
மேலாண்மையர்
administration
மேலாண்மை
application (app)
நிரல்; app யையும் program யையும் வேறுபடுத்துமாறு app யைச் செயலி என்று பலர் கூறுகின்றனர். ஆனால் செயலி என்றால் processor. அதனுடன் குழப்ப வேண்டாம். மேலும் ஆங்கிலத்தில் கூட app என்பது program என்னும் கலைச்சொல்லைத் தவிர்த்து உட்கருத்தைத் தெளிவற்றதாக்கும் ஆணவச்சொல்லாகத் தான் அமைகிறது. app யையும் program யையும் வேறுபடுத்தியேயாகவேண்டுமெனில் app யைப் பயனர் நிரல் எனச் சுட்டவும்.
argument
செயலுருபு
author (of a program)
நிரலாசிரியர்
bit
இருமி, நுண்மி
byte
இருமித்தொகுதி, எண்ணுண்மி
CD
குறுவட்டு
child node (of a tree)
சேய் கணு
command
கட்டளை
command line
கட்டளை வரி
compile
தொகு
computer
கணினி
copyright
பதிப்புரிமை
data stream
தரவுத்தொடர்
decrypt
மறைவிலக்கு
delete
அழி
directory
அடைவு
domain name
களப்பெயர்
download
பதிவிறக்கு
DVD
இறுவட்டு
encrypt
மறையாக்கு
error
வழு, பிழை
exit
வெளியேறு
file
கோப்பு
file size
கோப்பளவு
font
எழுத்துரு
free software
கட்டற்ற மென்பொருள்
function (programming)
செயலாற்றி
garbage collector (computer science)
குப்பைத்திரட்டி
group
குழு
group ID (GID)
குழு எண்
invalid
ஏற்கத்தகா; இது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம். இதன் பின் வல்லினம் மிகும்.
library (programming)
நிரலகம்
license
உரிமம்
mail
அஞ்சல், மின்னஞ்சல்
mailing list
அஞ்சற்பட்டி, மின்னஞ்சற்பட்டி
markup language
குறிமொழி
module (programming)
நிரல்கூறு
operating system
இயங்குதளம்
option (command line options like -l, -h)
செயல்மாற்றி
others
பிற
parent directory
தாயடைவு
parent node (of a tree)
தாய் கணு
passphrase
கடவுத்தொடர்
password
கடவுச்சொல்
process (as in Unix process)
செயலாக்கம்
process ID (PID)
செயலாக்க எண்
processor
செயலி
program
நிரல்
programming
நிரலாக்கம்
source code
மூலநிரல்
subdirectory
சேயடைவு
text
உரை
upload
பதிவேற்று
user
பயனர்
user ID (UID)
பயனர் எண்
utility
கருவி
valid
ஏற்கத்தகு
version
பதிப்பு
website
வலைத்தளம்; இணையம் என்றால் Internet. வலை என்றால் தான் web. ஆகவே website யைச் சுட்ட இணையத்தளம் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம்.