தமிழ்க் கணினிக் குழு

தமிழ்க் கணினிக் குழு உங்களை வரவேற்கிறது. இக்குழு கட்டற்ற மென்பொருட்களைத் தமிழாக்கம் செய்வதற்கும் பிற தமிழ் கணினி தகவல் தொழில்நுட்பங்களைப் பற்றிக் கலந்துரையாடுவதற்கும் உருவாக்கப்பட்டது. tamil@systemreboot.net என்ற அஞ்சற்பட்டியில் சேர்ந்துப் பங்கேற்க.

Translation Project

Translation Project என்பது பல்வேறு கட்டற்ற மென்பொருள் நிரல்களை மொழிபெயர்க்கப் பயன்படும் தளம். அங்குத் தமிழாக்கக் குழுவொன்றை உருவாக்கியுள்ளோம்.

தழிழாக்கத்தில் பங்கேற்பதெப்படி?

  • tamil@systemreboot.net அஞ்சற்பட்டியில் சேரவும்.
  • Translation Project யிலிருக்கும் மென்பொருள் தொகுப்புகளிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தமிழாக்கவும்.
  • தமிழாக்கப்பட்ட po கோப்பை அஞ்சற்பட்டிக்கு அனுப்பவும்.
  • அஞ்சற்பட்டியினர் குறைநிரை கண்டு, தேவையானால் திருத்தங்களை மேற்கொண்ட பின், Translation Project தமிழாக்கக் குழுவினரொருவர் உங்கள் பங்களிப்பை Translation Project யில் பதிவேற்றுவார்.

பாணிக் கையேடு

தமிழாக்கங்களை வெவ்வேறு மக்கள் வெவ்வேறு காலகட்டங்களில் செய்தாலும், அவை ஓரியல்புடையதாகயிருப்பது நன்று. அதற்குச் சிலக் குறிப்புகளைக் கீழ்காணலாம்.

  • கணினியியல் கலைச்சொற்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட தமிழாக்கங்களைப் பயன்படுத்தவும்.
  • ஆங்கிலத்தில் கட்டளை வரி நிரல்களில் கொள்ளிடங்கள் முகப்பெழுத்துகளில் குறிப்பிடப்படுவது வழக்கம். தமிழில் முகப்பெழுத்துகள் இல்லாததால் கொள்ளிடங்களை வேறுபடுத்திக் காட்ட அவற்றைக் கோண அடைப்புக்குறிகளுக்குள் அடைக்கவும். அதாவது "foo ARG" என்பதை "foo <செயலுருபு>" எனத் தமிழாக்குக.

மூலக்கோப்புகள்

இவ்வலைத்தளம் Emacs org mode கொண்டு உருவாக்கப்பட்டது. மூலக்கோப்புகள் இந்த git களஞ்சியத்தில் உள்ளன.